Breaking News: தனுஷ் தீடீர் விவாகரத்து ! மனைவி ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்தார் தனுஷ்

இந்திய சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் தனுஷ். தனுஸ்-ம் ரஜினியின் மூத்த மகளும் ஆன ஐஸ்வர்யா ஆகியோருக்கு 2004-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு யாத்ரா மற்றும்
 
Breaking News: தனுஷ் தீடீர் விவாகரத்து ! மனைவி ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்தார் தனுஷ்

இந்திய சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் தனுஷ். தனுஸ்-ம் ரஜினியின் மூத்த மகளும் ஆன ஐஸ்வர்யா ஆகியோருக்கு 2004-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.  இவர்களுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என்ற இரண்டு குழந்தைகளும் உண்டு.  இந்நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக தற்பொழுது இருவரும் பிரிய உள்ளதாக சமூக வலைத்தளங்களின் வாயிலாக தெரிவித்துள்ளனர்.  இது திரையுலகினர் மற்றும் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

Breaking News: தனுஷ் தீடீர் விவாகரத்து ! மனைவி ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்தார் தனுஷ்

ரஜினிகாந்த் மூத்த மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நடிகர் தனுஷ் திருமணமான தொடக்கத்தில் எந்த ஒரு சர்ச்சையில் சிக்காமல் இருந்து வந்தார். இவர் நடித்து வெளியான ஆடுகளம் படம் மிக பெரிய வெற்றியை பெற்று தந்தது, இந்த படத்துக்கு தனுஷ் தேசிய விருது பெற்றார். இதற்கு பின்பு அடுத்த கட்டத்துக்கு போன நடிகர் தனுஷ் அவர் நடிக்கும் திரைப்படத்தில் சில முக்கிய முடிவுகளை எடுக்கும் இடத்துக்கு வந்தார். இதனை தொடர்ந்து சில படங்கள் நடித்த தனுஷ் அவருடைய மனைவி இயக்கத்தில் 3 படத்தில் நடித்த போது சுருதிஹாசன் உடன் கிசு கிசுக்கப்பட்டு ரஜினிகாந்த் குடும்பத்தில் பெரும் சர்ச்சையாகி பின் சமரசமானதாக பரபரப்பாக பேசப்பட்டது. இதன் பின்பு தொடர்ந்து நடிகைகளுடன் சர்ச்சையில் சிக்கி வந்த தனுஷ், நடிகை அமலாபால், தொகுப்பாளினி டிடி ஆகியோர் விவாகரத்துக்கு தனுஷ் தான் காரணம் என பரபரப்பாக பேசப்பட்டது.

Breaking News: தனுஷ் தீடீர் விவாகரத்து ! மனைவி ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்தார் தனுஷ்

சமீபத்தில் ரஜினி நடிக்கும் படத்தை தனுஷ் இயக்க போவதாகவும் செய்திகள் உலா வந்தன. இந்நிலையில் திருமணமாகி 18 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் மனைவி ஐஸ்வர்யாவை பிரிவதாக தனுஷ் அறிவித்துள்ளார். தனுஷ் வெளியிட்ட அறிவிப்பில், ‛18 ஆண்டுகளாக நண்பர்களால், துணையாக, பெற்றோர்களாக வாழ்ந்தோம்.

தற்போது நாங்கள் ஒன்றாக பிரிய உள்ளோம். எங்களை நாங்கள் புரிந்து கொள்ள இந்த பிரிவை ஏற்படுத்தியுள்ளோம். எங்களது இந்த பிரிவை ஏற்றுக் கொள்ளுங்கள்’ என தெரிவித்துள்ளார். ஐஸ்வர்யாவும் விவாகரத்தை உறுதி செய்து அதே அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யாவும் முதல் கணவரை விவாகரத்து செய்தார். சமீபத்தில் இரண்டாவது திருமணமும் செய்து கொண்டார்.

Tags