ப்ரேக் அப் செய்த பழைய காதலியை மீண்டும் கரம் பிடிக்கும் மதன் கௌரி..!! அந்த பெண் யார் தெரியுமா?

தமிழ்நாட்டில் ஏகப்பட்ட யூட்யூப் சேனல்கள் இருந்தாலும் சில சேனல்கள் மட்டுமே மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளன.அதில் ஒரு சேனல் தான் மதன் கௌரி. மதன் தினமும் அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளை விரிவாக மக்களுக்கு கூறி இளைஞர்கள் மத்தியில் பிரபலமாக இருந்து வருகிறார். யாரும் அறிந்திராத பல வெளிநாட்டு, உள்நாட்டு சுவாரஸ்யமான தகவல்களை விரிவாக பேசி வீடியோவாக வெளியிட்டு வருகிறார்.

இவர் யூடியூப் மூலம் பட்டிதொட்டியெல்லாம் பிரபலமானார்.சேனல் எவ்வளவு பிரபலமாக இருக்கிறதோ அதே அளவிற்கு விமர்சனங்களையும் பெற்றிருக்கிறார்.
மதன் கௌரி நடத்தி வரும் இந்த சேனல் அவர் காதல் தோல்வியில் இருந்தபோது உருவாக்கப்பட்டது என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் மதன் கௌரி தனது திருமண செய்தியை பற்றி தனது யூடியூப் சேனலிலும் இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார்.

இதுகுறித்து இவர் பேசும் போது எங்கள் காதலை பற்றி வீட்டில் தெரிவிக்கும்போது எப்படி பதற்றமாக இருந்ததோஅதேபோல் தான் இப்போதும் இருக்கிறது.நான் மதுரையில் படிக்கும்போது நித்யா பற்றி என் நண்பர்கள் கூறுவார்கள்.இதன் மூலம் சமூக வலைதளங்களில் நண்பர்கள் ஆகி பேசி வந்தோம்.நான் நித்யாவை முதல் முறையாக ரயில் நிலையத்தில் பார்த்த போது இரண்டு பேருக்கும் பேச இரண்டு நொடிகள் மட்டுமே பேச நேர கிடைத்தது.

அதன் பிறகு தொடர்ந்து பழகினோம்‌.பின், இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது.
தொடர்ந்து காதலித்து வந்தோம்‌.பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக இவருக்கு இடையே ப்ரேக் அப் ஆனது.மேலும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மீண்டும் சேர்ந்திருக்கிறோம். இது தொடங்கி 11 வருடங்கள் ஆகின்றன. இந்த வருடத்தில் திருமணம் செய்துகொள்ள போகிறோம்” என்று பதிவிட்டுள்ளார். அவருக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Click  குட்டையான உடை போட்டுக் கொண்டு தாறுமாறான கவர்ச்சியில் நடிகை நந்திதா ஸ்வேதா..!!

Leave a Reply

Your email address will not be published.