ஹாலிவுட் பாணி திரில்லர் கதையில் தமிழில் வெளியான ஊமை விழிகள்..

ஊமை விழிகள் எனும் பொக்கிஷம்:
இன்று வரையிலும் தமிழ் திரைப்படக் கல்லுாரி மாணவர்களின் பெருமை மிகு அடையாளம், ஊமை விழிகள் படம்! காதல் வழக்கமான கமர்ஷியல் என்று தமிழ் சினிமா ஓடிக்கொண்டிருந்த காலம் நீண்ட வருடம் கழித்து ‘சஸ்பென்ஸ் திரில்லர்’ பக்கம் மக்களை திசை திருப்பிய படம், ஊமை விழிகள்.

அதுவரை சினிமாஸ்கோப்’ தொழில் நுட்பம் பயன்படுத்தி எடுத்த சிவாஜியின் ராஜ ராஜ சோழன் , ரஜினி, கமல் நடித்த, அலாவுதீனும் அற்புத விளக்கும் திரைப்படம் என அந்த தொழில்நுட்பத்தில் தயாரான திரைப்படங்கள் படுதோல்வி அடைந்தன. இதனால், சினிமாஸ்கோப் என்றாலே, சினிமாத்துறையினர் கலக்கம் அடைந்திருந்த சமயத்தில் அதை உடைத்தெறிந்த படம், ஊமை விழிகள்

திரைப்படக் கல்லுாரி மாணவர்களின் இந்த கதைக்காக ஊதியம் வாங்காமலும், வயதான தோற்றத்திலும் நடித்துக் கொடுத்தார் விஜயகாந்த். முதலில் இதனை குறும்படமாக எடுத்து பின்னர் அதை விரிவுப்படுத்தி, சினிமாவாக எடுத்துள்ளனர்.

ஆபாவாணன் திரைக்கதை, பாடல்கள், வசனம் எழுதி படத்தினை தயாரித்தார். ஒரு இளைஞன், அழகான கண்களை கொண்ட பெண்ணைக் காதலிக்கிறான்; அவள் அவனை ஏமாற்றி விடுகிறாள். இதன் பின், பழிவாங்கும் படலமாக, அழகான பெண்களின் கண்களை, அந்த இளைஞன் பறிக்கிறான் என்பது தான் படத்தின் கதை !..

அதுவரை தமிழ் சினிமா பேசிய காதல், குடும்ப செண்டிமெண்ட் வகைகளை கடந்து இந்தப் படம் ஒரு புதிய தளத்தை ரசிகர்களுக்கு அமைத்துக் கொடுத்தது.

ஆபாவாணன், அரவிந்தராஜ், ரமேஷ் ஆகிய சென்னை திரைப்பட கல்லூரி மாணவர்கள் உருவாக்கிய சினிமாஸ்கோப் படமாக வெளிவந்து , முதல்நாளிலேயே இந்த படம் , பெரிய வெற்றியை பதிவு செய்யும் என்று பலராலும் அடித்து சொல்லப்பட்டது. எங்கு பார்த்தாலும் ஊமை விழிகள், ஊமை விழிகள் என மக்கள் பலரும் பேசி பேசி படம் வெள்ளிவிழாவை கடந்தது.

சரி மீதிக்கதைக்கு வருவோம் ” கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள சோழா பிக்னிக் வில்லேஜ் என்கிற ரிசார்ட். உரிமையாளர் பி.ஆர்.கே கதாபாத்திரத்தில் அக்கால கதாநாயகன் – நடிகர் ரவிச்சந்திரன் நடித்திருந்தார்.
ரிசார்ட்டுக்கு வரும் இளம்பெண்கள் பலர் மர்மமான முறையில் அடுத்தடுத்து காணாமல் போகிறார்கள். இதனை விசாரிக்க வரும் பத்திரிகையாளர் ராஜா (நடிகர் சந்திரசேகர்) அங்கு நிகழும் மர்மத்தை பற்றி துப்பு துலக்க ஆரம்பிக்கிறார் ஆனால் அவர் கொல்லப்படுகிறார்.

தினமுரசு’ பத்திரிக்கை உரிமையாளர் சந்திரனாக நடிகர் ஜெய்சங்கர் நடிக்க, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தீன தயாளனாக விஜயகாந்த், பத்திரிகையாளர் விஜய் வேடத்தில் நடிகர் அருண்பாண்டியன் ஆகியோர் சேர்ந்து சோழா பிக்னிக் வில்லேஜ் மர்மங்களையும், இங்கு நடக்கும் கொடுமைகளுக்கு ஆதரவாக உள்ள அரசியல்வாதிகளையும் பற்றி கண்டுபிடிக்கிறார்கள். இறுதியில் எப்படி இதை கண்டுபிடித்து வெற்றி பெற்றார்கள் என்பதே கதை..

Click  படுக்கையறையில் டைட் உடையில் ஹாட் போஸ் கொடுத்த தெலுங்கு நடிகை..!! சூடான இளசுகள்!!

ஒவ்வொரு காட்சியிலும் ‘திக்..திக்’ என ரசிகர்களை இருக்கையின் நுனிக்கு கொண்டு வந்தார் இயக்குநர்.. படத்தின் பின்னணி இசையில் ( ஆபாவாணன், மனோஜ் மற்றும் கியான்), பாடல்களும் (ஆபாவாணன்) படத்தை நகர்த்திக் கொண்டே செல்லும் மிகவும் உதவியாக அமைந்தது படத்தின் ராத்திரி நேரத்து பூஜையில்… மாமரத்து பூவெடுத்து மஞ்சம் ஒன்று…தோல்வி நிலையென நினைத்தால்… ஆகிய பாடல்கள் புதிய இசையமைப்பாளர்களின் புதுவித உணர்வோடு ரசிகர்களுக்கு புதிய இசை ரசனையை அளித்தன.

படத்தின் ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் சிறப்பு. படம் இறுதிக்கட்டத்தை எட்டும் காட்சியில் கார்கள் வரிசையாக அணிவகுத்து வரும் போது, விளக்குகள் மட்டும் மின்மினிப் பூச்சிகளைப் போல காட்டிய போது ரசிகர்களின் கைத்தட்டல் அடங்க சிறிது நேரம் ஆனது.

படத்தில் வரும் ஒரு மர்ம கிழவியை காட்டும் காட்சியில் ரசிகர்களை திக்..திக்..திகில் என ஒருவித பீதி மனதை தொற்றிக் கொள்வதை தவிர்க்கவே முடியாது..

கேப்டன் விஜயகாந்த், நடிகை சரிதா, நவரச நாயகன் கார்த்திக், சசிகலா, அருண்பாண்டியன், விசு, சந்திரசேகர், இளவரசி, ரவிச்சந்திரன், ஜெய்சங்கர், செந்தில், ஸ்ரீவித்யா, மலேசியா வாசுதேவன் என நட்சத்திர பட்டாளமே நடித்த “மல்டி ஸ்டாரர் ” படம் தான்‘ஊமை விழிகள்.

படம் வெளிவந்த சமயத்தில் கமல், ரஜினி, மோகனுக்கு பிறகு நான்காவது இடத்தில் இருந்தாலும் மிகவும் பிசியான நடிகராக அந்நாளில் வலம் வந்தவர் விஜயகாந்த். இந்த படத்திற்கு பின்னர் நடிகர் ரவிச்சந்திரன் அவர்களின் இரண்டாவது இன்னிங்ஸ் தொடங்கியது என்றே சொல்லலாம்.

படம் வெளியாகி 34 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில் தற்போதும் இந்தபடம் ஒரு விடுமுறை தினத்தின் மாலை வேளையில் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பினால் TRP ரேட்டிங்கில் புதிய படங்களுக்கே “டப்” கொடுக்கும் என்றே சொல்லலாம்.

தமிழ் சினிமாவில் ரீ-ரிக்கார்டிங் விஷயத்தில் கிங்காக இருந்தவர் இளையராஜாதான். அவரே மனோஜ்-கியானின் பின்னணி இசையினை அதிலும் வயலின் பயன்படுத்திய விதத்தை இளையராஜா மனம் திறந்து பாராட்டினார்.

மனோஜ்-கியான் இரட்டையர் பாலிவுட்டில் பிரபலமான லட்சுமிகாந்த் பியாரிலாலின் சிஷ்யர். ‘ஊமை விழிகள்’ படத்தைப் பார்த்த சென்சார் போர்டோ படத்துக்குத் `தடை’ என்று கூறிவிட்டது. சினிமா உலகில், ‘அவ்வளவுதான்; ‘ஊமைவிழிகள்’ படம் ரிலீஸே ஆகாது’ என பேச ஆரம்பித்துவிட்டனர். ஒருவழியாக டெல்லி வரை சென்று போராடி சென்சார் சான்றிதழ் வாங்கி படம் வெளியாகியது…

படம் வெள்ளிவிழாவை கடந்து மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்து தமிழ் சினிமாவில் ஒரு புதிய சகாப்தம் உருவாக்கியது..

Leave a Reply

Your email address will not be published.