நீங்க டிரஸ் போட்டு இருக்கீங்களா..!! நீச்சல் குளத்தில் ஹாட் போஸ் கொடுத்த பாடகி ஜொனிதா காந்தி!!

பாடகி ஜொனிதா காந்தி மணி ரத்னம் இயக்கத்தில் ஏ ஆர் ரகுமான் இசையில் ஓ காதல் கண்மணி திரைப்படத்தில் மென்டல் மனதில் பாடல் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.இவர் 1989 ஆம் ஆண்டு டெல்லியில் பிறந்தார்.இவர் இளம் வயதிலேயே இசை துறையில் ஆர்வம் கொண்டவர்.ஜொனிதா தனது கல்லூரி படிப்பை கனடாவில் வணிக துறையில் பட்டம் பெற்றார்.

இவர் கல்லூரி நாட்களில் தனது இசை திறமையை நன்கு வளர்த்து கொண்டார். இவர் 1995 ஆம் ஆண்டு டொராண்டோவில் தனது முதலாவது இசை நிகழ்ச்சியை நடத்தினார்.இவர் 2011 ஆம் ஆண்டு யூட்யூப் கவர் சாங் வெளியிட்டு இவருக்கு ரசிகர்கள் குவிந்தனர். இதன் மூலம் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் நடித்த சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் பாட வாய்ப்பு கிடைத்தது. அதற்கு பின்னர் ஜோனிதா பாடிய பாடல்கள் அனைத்தும் ஹிட் அடித்தது.

இதற்கு பிறகு இவர் 24, அச்சம் என்பது மடமையடா,வேலைக்காரன்,கோலமாவு கோகிலா, காற்று வெளியிடை மற்றும் இரும்புத்திரை, போன்ற பல படங்களில் பாடியுள்ளார்.  இவர் இதுவரை ஆங்கிலம், இந்தி, தமிழ், பெங்காலி, தெலுங்கு, குஜராத்தி, மராத்தி மற்றும் கன்னடம் போன்ற பல்வேறு மொழிகளில் பல சூப்பர் ஹிட் பாடல்களை பாடியுள்ளார்.சமீபத்தில் டாக்டர் படத்தில் பாடிய செல்லம்மா பாடல்
ரசிகர்கள் மத்தியில் வைரலானது.

நயன்தாரா, விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் தயாரிக்கும் வாக்கிங்/டாக்கிங் ஸ்ட்ராபெர்ரி ஐஸ்க்ரீம் என்ற படத்தில் ஜோனிடா காந்தி கதாநாயகியாக நடிக்க உள்ளார்.இசை நிகழ்ச்சிகளில் பிஸியாக இருக்கும் இவர் அவ்வபோது மாடலிங் செய்து வருகிறார்.அந்த வகையில் தற்போது நீச்சல் குளத்தில் இருந்து சில கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.இதை பார்த்த ரசிகர்கள் எக்குதப்பாக வர்ணித்து வருகிறார்கள்.

Click  அழகிய தமிழ் பாடலுக்கு நடனமாடும் பெண்கள் ! 50 லட்சம் பேர் பார்த்த வைரல் வீடியோ !

Leave a Reply

Your email address will not be published.