சீரியலில் குடும்ப குத்துவிளக்காக நடிக்கும் ஐரா வா இது..? வைரலாகும் போட்டோ ஷூட்!!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ராஜா மகள் சீரியலில் துளசி என்ற கேரக்டரில் நடித்து வருபவர் தான் ஐரா அகர்வால்.இவர் 2000 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார். இவர் தனது கல்லூரி படிப்பை முடித்து விட்டு மாடலிங் துறையில் ஈடுபட்டு வந்தார் இவர் 2015 ஆம் ஆண்டு மிஸ் சவுத் இந்தியா பேசன் பேகனட் போட்டியில் வெற்றி பெற்றார். இதன் மூலம் இவருக்கு ஏராளமான விளம்பரங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

பின்னர் சினிமாவில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இவர் 2016 ஆம் ஆண்டு வாடு வீடு ஓ கல்பனா என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவில் நுழைந்தார். இந்த படத்தில் இவர் தான் ஹீரோயினாக நடித்திருந்தார். இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை பெறவில்லை.தமிழில் 2018ல் காட்டு பய சார் இந்த காளி மற்றும் தாயம் ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். இவர் பல படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார்.

இவர் 2017 ஆம் ஆண்டு சன்டிவி யில் ஒளிபரப்பான கங்கா சீரியலில் மஹிமா என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். பிறகு கண்மணி சீரியலில் வானதியாக நடித்து பிரபலமானார். அதன்பிறகு விஜய் டிவி ஒளிபரப்பான கடைக்குட்டி சிங்கத்தில் நடித்திருந்தார் ஐரா அகர்வால். அந்த சீரியலில் மீனாக்ஷி என்ற கேரக்டரில் நடித்து வந்தார்.தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ராஜமகள் சீரியலில் நடித்து வருகிறார்.

இவர் கடந்த 6 ஆண்டுக்கும் மேலாக குத்துச்சண்டையில் பங்கேற்று வருகிறார். சர்வதேச குத்து சண்டை போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.இவர் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.இவர் தனது பாக்ஸிங் பயிற்சி வீடியோக்கள், போட்டோ ஷூட் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.
தற்போது குட்டையான உடையில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.இந்த புகைப்படங்கள் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

Click  ஷிவானியை சீண்டிய பாண்டியன் ஸ்டோர்ஸ் சித்ரா ! பதிலடி கொடுத்த ஷிவானி ! இருந்தாலும் அந்த வார்த்தை பயன்படுத்தியிருக்க கூடாது !

Leave a Reply

Your email address will not be published.