பெரியாரிய பெருச்சாளிகள் ! கொந்தளிக்கும் நடிகை கஸ்தூரி ! தனது மனக்குமுறலை ட்விட்டரில் வெளியிட்டார் என்ன சொல்லியுள்ளார் தெரியுமா ?

சில நாட்களுக்கு முன்பு மாரிதாஸ் என்பவர் பிரபல தனியார் தொலைக்காட்சிகள் ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறி ஆதாரத்தை வெளியிட்டார் . இது வைரலானதை தொடர்ந்து கடந்த சில நாட்களாக இது தான் ட்ரெண்டிங்கில் உள்ளது . இந்த விவகாரத்தில் முக்கியமாக கறுப்பர் கூட்டம் என்ற தமிழ் youtube சேனலின் பெயர் அடிபட்டது

காரணம் அவர்கள் தொடர்ந்து இந்துக்களின் மதநம்பிக்கைக்கு எதிராக செயல்பட்டு வந்தனர் . இந்து கடவுள்களை பற்றி அவர்கள் சில ஆ பா ச கருத்துக்களையும் வெளியிட்டு வந்திருந்தனர் குறிப்பாக தமிழ் கடவுளான முருகனின் கந்தசஷ்டி கவசத்தை இ ழி வாகவும் ஆ பா ச மாகவும் சித்தரித்து வீடியோ வெளியிட்டனர் .

மேலும் இவர்கள் பல இந்து கடவுள்களையும் ஆ பா ச மான முறையில் சித்தரித்து வீடியோ வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருந்தனர் . இந்நிலையில் தான் இந்த கருப்பர் கூட்டத்திற்கு எதிராக பலரும் குரல் எழுப்ப துவங்கினர் . அதனால் வேக வேகமாக அந்த விடீயோக்களை தங்கள் சேனலில் இருந்து டிலீட் செய்து வருகிறது கருப்பர் கூட்டம் .

இந்நிலையில் கருப்பர் கூட்டத்தின் இந்த நடவடிக்கைக்கு எதிராக தனது ட்விட்டர் பக்கத்தில் பொங்கி எழுந்துள்ளார் நடிகை கஸ்தூரி . பல தமிழ் திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகை கஸ்தூரி இப்போது தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார் . அவ்வப்போது அரசியல் கருத்துக்களை கூறிவரும் நடிகை கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில் கடந்த இரண்டு வாரங்களாக நான் பரபரப்பாக இருந்ததால் என்னால் செய்திகளை பின்தொடர முடியவில்லை

அதனால் தனக்கு கருப்பர் கூட்டம் முருகப்பெருமானின் கந்த சஷ்டி கவசத்தை இழிவு படுத்தியதை பற்றியும் அந்த முழு விவகாரம் பற்றியும் கூறுமாறு பதிவிட்டிருந்தார் . அது தொடர்பான விடீயோக்களை சில அனுப்பிய நிலையில் அதை பார்த்த கஸ்தூரி டீவீட்டில் தனது மனக்குமுறலை வெளிப்படுத்தியுள்ளார் .

அந்த டீவீட்டில் அவர் கூறியது பின்வருமாறு “கறுப்பர் கூட்டம் You tube Channel ஐ பார்த்தேன், ஜாதி சமூக நீதி எல்லாம் பேசும் சாக்கில் பிரிவினை , ப்ராஹ்மணத்துவேஷம், இந்துமத அவமதிப்பு , வன்மம் இதை மட்டுமே பேசும் காணொளிகள். பெரியாரிய பெருச்சாளிகள் . இவர்களின் அண்டப்புளுகை நிஜமென்று நம்புவதற்கு பெயர்தான் பகுத்தறிவா? .”

இவ்வாறு தனது மனக்குமுறலை வெளிப்படுத்தியுள்ளார் நடிகை கஸ்தூரி இந்த ட்வீட் இப்போது வைரலாக பரவி வருகிறது. இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் படிக்க மேலே உள்ள Follow பொத்தானை அழுத்தி பாலோ செய்து கொள்ளவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *