புனித் ராஜ்குமார் மரணம் – விஷால் செய்த செயல் ! நெகிழ்ச்சியில் ரசிகர்கள் ! இதற்கும் மணம் வேண்டும்

கன்னட திரை உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ‘பவர் ஸ்டார்’ புனித் ராஜ்குமார் (வயது 46) நேற்று முன்தினம் பெங்களூருவில் மாரடைப்பால் மரணம் அடைந்தார். இவர் மறைந்த கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார்-பர்வதம்மா தம்பதியின் இளையமகன் ஆவார். அவரது இந்த மரணம், அவரது குடும்பத்தினர், ரசிகர்கள், கன்னட மக்களை சோக கடலில் ஆழ்த்தியுள்ளது.

புனித் ராஜ்குமாரின் மரணம் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில். அரசியல் தலைவர்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இவர் நடிகர் என்பதையும் தாண்டி பல பொது சேவைகளிலும் ஈடுபட்டு வந்தார் . புனித் ராஜ்குமாரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதாக கூறிய நடிகர் விஷால் . இதுவரை புனித் கல்வியுதவி அழித்துவந்த 1800 மாணவர்களின் கல்வி பொறுப்பை தான் ஏற்றுக்கொள்வதாக கூறியுள்ளார்.

மறைந்த கன்னட நடிகர் புனீத் ராஜ்குமார் படிக்க வைத்து வந்த 1800 மாணவர்களை தான் படிக்க வைப்பதாக நடிகர் விஷால் உறுதி அளித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், புனித் ராஜ்குமார் ஒரு நல்ல நடிகர் மட்டுமல்ல, நல்ல நண்பரும் கூட. அவரைப் போன்ற ஒரு டவுன் டு எர்த் சூப்பர் ஸ்டாரை நான் பார்த்ததில்லை. பல சமூக பணிகளை செய்து வந்தவர். அவரைப் போன்று தாழ்மையான ஒருவரை நான் பார்த்ததில்லை.அவரிடம் இலவச கல்வி பெற்று வரும் 1800 மாணவர்களையும் அடுத்த ஆண்டு முதல் கவனித்துக் கொள்வதாக உறுதி அளிக்கிறேன் என்று விஷால் தெரிவித்துள்ளார்.

Click  காட்டுக்குள் உச்சகட்ட ஹாட் உடையில் ஸ்ரீ தேவி மகள்..!! ஷாக்கான ரசிகர்கள்!!

Leave a Reply

Your email address will not be published.