காற்றுக்கென்ன வேலி” சீரியலில் இருந்து இதற்காகத்தான் விலகினேன்…அவரே கூறிய தகவல்….!!

காற்றுக்கென்ன சீரியலிருந்து விலகியதற்கான காரணத்தை தர்ஷன் கூறியுள்ளார்.

விஜய் டிவியில் ஓடிக் கொண்டிருக்கும் பிரபலமான சீரியல்களில் ஒன்று ”காற்றுக்கென்ன வேலி”. இந்த சீரியலுக்கென்றே தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. சமீபத்தில், இந்த சீரியலின் நாயகன் தர்ஷன் இந்த சீரியலிருந்து விலகினார்.

விஜய் டிவியில் திங்கள் முதல் சனி வரை மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது காற்றுக்கென்ன வேலி சீரியல். தற்போது 200 எபிசோடுகளை கடந்து இந்த சீரியல் ஓடிக்கொண்டு இருக்கிறது.

கல்லூரி படிக்கும் காலத்திலேயே அப்பா திருமணம் ஏற்பாடு செய்ததால் வீட்டில் இருந்து ஓடி வரும் ஹீரோயின் நிலா சென்னை வந்து அக்கா வீட்டில் தங்கி இங்கேயே ஒரு கல்லூரியில் சேர்கிறார். வீட்டில் அக்கா கணவரின் சில்மிஷம், கல்லூரி ஆசிரியர் சூர்யா உடன் காதல், அதனால் வரும் பிரச்சனைகள் என பல பிரச்சனைகள் வந்தாலும் நிலா அதை எல்லாம் எப்படி சமாளிக்கிறார் என்பது தான் கதை. சமீபத்திய எபிசோடுகளில் கல்லூரி பிரச்சனைக்காக நிலாவை ஆள் வைத்து அடித்தது யார் என்கிற பிரச்சனை தான் ஓடிக்கொண்டு இருக்கிறது.

இதனையடுத்து இந்த சீரியலில் இருந்து ஏன் விலகுனீர்கள் என தர்ஷனிடம் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர் ஒருவர் கேள்வி கேட்டுள்ளார்.

அதற்கு பதிலளித்த அவர், ”நான் வேறு ஒரு ப்ராஜெக்ட்டிலும் இருக்கிறேன். இரண்டிற்கும் நேரம் ஒதுக்குவது மிகவும் கடினமாக உள்ளது எனவும், காற்றுக்கென்ன வேலி சீரியலில் என்னுடைய ஹேர் ஸ்டைலை மாற்றி விட்டதால் அது எனக்கு பிடிக்கவில்லை என்பதாலும் இந்த  சீரியலில் இருந்து விலகினேன் என பதிலளித்துள்ளார்.

Click  செம்ம ஹாட் பொங்க பொங்க பி கினி உடையில் சங்கர் பட நடிகை..!! தீயாய் பரவும் புகைப்படங்கள்!!

Leave a Reply

Your email address will not be published.