அஞ்சாதே படத்தில் பிரசன்னா கடத்திய குழந்தைகளா இது.? நிஜமாகவே அக்கா தங்கையா இப்போ எப்படி இருக்காங்கன்னு பாருங்க!!

தமிழ் சினிமாவில் மிஷ்கின் யூத், காதல் வைரஸ் போன்ற படங்களில் துணை இயக்குனராக பணியாற்றி உள்ளார்.இவர்
தமிழில் சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.இந்த திரைப்படத்தை தொடர்ந்து அஞ்சாதே திரைப்படத்தை இயக்கினார் மிஷ்கின்.
இந்த படத்தில் நரைன், விஜயலட்சுமி, பிரசன்னா, பாண்டியராஜன் போன்ற பல பிரபலங்கள் நடித்திருந்தனர்.இந்த திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது.

அஞ்சாதே படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் பிரசன்னா பள்ளிமாணவிகளை
கடத்துவார் .அந்த பள்ளி மாணவிகள் கதா பாத்திரத்தில் நடித்த இருவரும் நிஜத்திலும் அ‌க்கா தங்கைகள் தான். தற்போது இவர்கள் இருவருமே தமிழில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.இவர்கள் இருவர் தினேஷ் நடிப்பில் வெளியான அட்டகத்தி படத்தில் நதியா, திவ்யா என்ற கதா பாத்திரத்தில் நடித்திருந்தனர்.

திவ்யா கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் சோபியா.அதே போல நதியா என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் சோபியாவின் உடன் பிறந்த அக்கா என்பது பலரும் அறிந்திராத ஒன்று.சோபியா பல ரியாலிட்டி ஷோகளில் பங்கேற்றுள்ளார். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி நடன நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளார்.

சோபியா நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதர் மணிகண்டனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். மணிகண்டன் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வள்ளி கேளடி கண்மணி, அழகு போன்ற சீரியல்களில் நடித்துள்ளார். இவர்கள் கடைசியாக விஜய் டிவியில் மிஸ்டர் அண்ட் மிஸ்சஸ் ரியாலிட்டி ஷோவில் போட்டியாளராக பங்கேற்றனர். ஆனால் உடல் நலபிரச்சனை காரணமாக பாதியிலேயே நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினர்.

Click  சாத்தான்குளம் போல் அடுத்து போலீசால் தாக்கபட்டு ஆட்டோ டிரைவர் மரணம் தொடரும் போலீஸ் வெறியாட்டம்!!

Leave a Reply

Your email address will not be published.