வாகா எல்லையில் நடிகர் அஜித்…. இந்திய கொடியை ஏந்தியவாறு , இராணுவ வீரர்களுடன் உள்ள புகைப்படம்…. இணையத்தில் வைரல்….!!

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித் . இவர் தற்போது ‘வலிமை’ படத்தில் நடித்து வருகிறார். இவர் சமீபகாலமாகவே உலக அளவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார் என்பது பலருக்கு தெரிந்த விஷயம் தான்.

அந்தவகையில், தற்போது, இவர் வாகா எல்லைக்கு சென்றுள்ளார். அங்கு நம்முடைய இந்தியக் கொடியை ஏந்தி பிடித்தவாறு இருக்கும் இவரின் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. மேலும், அங்கு இருக்கும் ராணுவ வீரர்களையும் நடிகர் அஜித் சந்தித்து பேசியுள்ளார். இந்தப் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றன.

நடிகர் அஜித்குமார் இந்திய-பாகிஸ்தான் எல்லையான வாகாவுக்கு சென்றுள்ளார். அவர் அங்கு இந்திய பாதுகாப்பு படையினருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

வலிமை பட ஷூட்டிங் முடிந்த கையோடு, நடிகர் அஜித் தனது பைக்கில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக டெல்லியில் உள்ள தாஜ்மஹாலை பார்வையிட்டார். அதன்பின், யாரும் எதிர்பாராத வகையில் நடிகர் அஜித் நேற்று இந்திய-பாகிஸ்தான் எல்லைப் பகுதியான பஞ்சாப் மாநிலம் வாகாவுக்கு பைக்கில் சென்றுள்ளார்.

அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த எல்லை பாதுகாப்பு படையினருடன் அவர் புகைப்படம் எடுத்துக் கொண்டார். மேலும், தனது கையில் தேசியக் கொடியை ஏந்தியவாறு வாகா எல்லையில் நடிகர் அஜித் குமார் நின்றுள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.

Click  புனித் ராஜ்குமார் மரணம் - விஷால் செய்த செயல் ! நெகிழ்ச்சியில் ரசிகர்கள் ! இதற்கும் மணம் வேண்டும்

Leave a Reply

Your email address will not be published.