பேஸ்புக்,இன்ஸ்டாகிராம் , பப்ஜி, உள்ளிட்ட 89 செயலிகளுக்கு தடை ! நள்ளிரவில் வெளியான அறிவிப்பு !

இந்தியர்களின் தகவலை முறைகேடாக திருடி சீனாவுக்கு கொடுப்பதாக 59 சீன செயலிகளை தடைசெய்தது மத்திய அரசு அந்த பட்டியலில் டிக்டாக் , ஹெலோ , யுசி பிரவுசர் , ஷேர் இட் உள்ளிட்ட நாம் அன்றாடம் பயன்படுத்தும் செயலிகள் பல இருந்தனரா . இதனால் டிக் டாகின் தாய் நிறுவனத்திற்கு 45 ஆயிரம் கோடி வரை இழப்பு ஏற்பட்டதாக செய்தி வெளியானது

இது ஒருபுறம் இருக்க இந்திய சீன எல்லை மற்றும் இந்திய பாகிஸ்தான் எல்லலையில் பதற்றமான சூழல் நீடித்து வருகிறது இதனால் மேலும் 89 செயலிகளை ராணுவ வீரர்கள் மற்றும் எல்லையில் ராணுவம் சார்ந்த பணியில் உள்ளவர்கள் பயன்படுத்த தடைவிதித்து ஆணை பிறப்பித்துள்ளது இந்திய ராணுவம்

அந்த தடைசெய்யப்பட்ட செயலிகள் பட்டியலில் தினமும் பயன்படுத்தும் பேஸ்புக் , இன்ஸ்டாகிராம் , பப்ஜி , ஷேர் சாட் , ஹைக் , உள்ளிட்ட பல செயலிகள் உள்ளது . அணைத்து சமூகவலைத்தளங்களும் இந்த பட்டியலில் வந்துவிட்டது . ஏற்கனவே 59 சீன செயலிகள் நாடுமுழுவதும் தடைசெய்யப்பட்ட நிலையில் இப்போது இந்த 89 செயலிகள் ராணுவ வீரர்கள் பயன்படுத்த தடைசெய்யப்பட்டுள்ளது

நேற்றிரவு நடந்த உயர்மட்ட ராணுவ அதிகாரிகளின் கூட்டத்திற்கு பின் இந்த அறிவிப்பு வெளியான நிலையில் உடனே தங்கள் போனிலிருந்து அந்த செயலிகளை நீக்க ராணுவ வீரர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது . எல்லையில் நடக்கும் ராணுவ நடவடிக்கைகள் வெளியில் கசிய சமூகவலைத்தளம் காரணமாக இருக்கும் என்று கருத்தப்படுவதாலும் . இந்த சமூகவலைத்தளங்கள் வழியாக போலி கணக்குகளை உருவாக்கி பாகிஸ்தான் மற்றும் சீனா நமது ராணுவத்தினரின் நடவடிக்கையை வேவுபார்க்கும் சம்பவங்களும் அதிகரித்து வவருவதாலும் தான் இந்த முடிவை எடுத்திருப்பதாக ராணுவ உயரதிகாரிகள் கூறியுள்ளனர்.

Click  16 ஆண்டுகளுக்கு பின் கர்ப்பமடைந்த மனைவி ! அரசு மருத்துவமனையில் முழு சிகிச்சை மற்றும் பிரசவம் பார்த்த MLA ! தமிழகத்தில் இப்படி ஒரு MLAவா ! ஆச்சர்யத்தில் மக்கள் !

Leave a Reply

Your email address will not be published.