4 ஆவது முறையாக கோப்பையை கைப்பற்றிய CSK ! சென்னை அணி வெற்றி பெற்ற தருணம் !

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி துபாயில் இன்று நடந்தது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ்
 

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி துபாயில் இன்று நடந்தது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற கொல்கத்தா அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. 

முதலில் பேட் செய்த சென்னை அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுக்கு 192 ரன்கள் குவித்தது. கெய்க்வாட் 32 ரன்கள், உத்தப்பா 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். பவுண்டரி, சிக்சர்களாக பறக்கவிட்ட டூ பிளெசிஸ் 86 ரன்கள் குவித்து கடைசி பந்தில் அவுட் ஆனார். மொயீன் அலி 37 ரன்களுடன்  ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

4 ஆவது முறையாக கோப்பையை கைப்பற்றிய CSK ! சென்னை அணி வெற்றி பெற்ற தருணம் !

193 ரன்கள் என்ற இமாலய இலக்கை சேஸ் செய்த கொல்கத்தா அணி
கொல்கத்தாவிற்காக ஷூப்மன் கில் மற்றும் வெங்கடேஷ் ஐயர் களம் இறங்கி இருந்தனர். இருவரும் 91 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தனர். 11-வது ஓவரின் நான்காவது பந்தில் 50 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார் வெங்கடேஷ். 

4 ஆவது முறையாக கோப்பையை கைப்பற்றிய CSK ! சென்னை அணி வெற்றி பெற்ற தருணம் !

அதற்கடுத்த 36 பந்துகளில் 7 விக்கெட்டுகளை இழந்தது கொல்கத்தா. வெறும் 34 ரன்களை மட்டுமே எடுத்தது. அது அந்த அணியை ஆட்டத்தில் வீழ்ச்சிக்கு தள்ளியுள்ளது. சென்னை அணியின் பவுலர்கள் தாக்கூர் மற்றும் ஜடேஜா வீசிய ஒரே ஓவரில் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தனர். 

4 ஆவது முறையாக கோப்பையை கைப்பற்றிய CSK ! சென்னை அணி வெற்றி பெற்ற தருணம் !

கொல்கத்தா அணியின் 4-வது வீரராக சுனில் நரைன் இறக்கப்பட்டார். நரைன் மாற்றத்தை ஏற்படுத்துவார் என்று எதிர்பார்த்த நிலையில் 2 ரன்னில் அவுட்டாகி நடையை கட்டினார். நம்பிக்கை நட்சத்திரமாக இருந்த சுப்மன் கில்லும் அரைசதம் அடித்த கையோடு தீபக் சஹர் பந்துவீச்சில் அவுட்டாகினர்.

4 ஆவது முறையாக கோப்பையை கைப்பற்றிய CSK ! சென்னை அணி வெற்றி பெற்ற தருணம் !

தினேஷ் கார்த்திக் வந்த முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்து அதிரடி காட்டினார். இதனால் போட்டியில் பரபரப்பு கூடும் என்ற நினைத்த கையோடு 9 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார். ஷகிப் அல் ஹசன் ரன் ஏதும் எடுக்காமலும் ராகுல் திரபாதி 2 ரன்னிலும் கேப்டன் பொறுப்பில் மட்டும் இருந்து வந்த மோர்கன் 4 ரன்னிலும் அவுட்டாகினர்.

4 ஆவது முறையாக கோப்பையை கைப்பற்றிய CSK ! சென்னை அணி வெற்றி பெற்ற தருணம் !

இதனால் கொல்கத்தா அணி 125 ரன்களுக்கு 8 விக்கெட்களை இழந்து பரிதாப நிலைக்கு சென்றது. இறுதியாக கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்களை இழந்து 165 ரன்கள் மட்டுமே எடுத்தது. 27 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற சிஎஸ்கே அணி 4-வது முறையாக தோனி தலைமையில் சாம்பியன் பட்டத்தை வென்றது.

Click  சிவப்பு நிற டி சர்ட்டில் தொ டை யழகை காட்டி ரசிகர்களை வெறி ஏத்தும் தெலுங்கு நடிகை..!!

Tags