பிக்பாஸ் அபிஷேக் ராஜாவின் முன்னாள் மனைவி வெளியிட்ட அதிர்ச்சி அறிவிப்பு!!

விஜய் தொலைக்காட்சியில் கடந்த அக்டோபர் 3 முதல் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.இந்த நிகழ்ச்சியில்
18 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். இதில் ஒரு போட்டியாளராக அபிஷேக் ராஜா பங்கேற்றுள்ளார்.இவர் யூடியூப்பில்
படங்களின் விமர்சனங்கள் மற்றும் நேர்காணல் செய்து வருகிறார்.

இவர் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த பின்னரும் தன்னுடைய விமர்சனத்தை தொடர்ந்து செய்து வருகிறார்.நேற்றைய எபிசோட்டில் முகத்தை பார்த்து ஜோசியம் சொல்கிறேன் என்று ஒவ்வொருவரின் முகத்தை பார்த்து அவர்களுடைய கேரக்டரை சொல்லி வருகிறார்.இதைத் தொடர்ந்து திடீரென எல்லோருடைய பார்வையும் தன் மீது படவேண்டும் என்பதற்காக அம்மா சென்டிமென்ட் கதையை எடுத்து விட்டார்.

அபிஷேக் ராஜாவுக்கு திருமணம் நடந்து ஒரு சில ஆண்டுகளில் விவாகரத்து ஆகிவிட்டது என்பதை அவரே பிக்பாஸ் நிகழ்ச்சியில் கூறியிருந்தார். தற்போது அவருடைய முன்னாள் மனைவி தீபா நடராஜன் ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.நான் அபிஷேக் ராஜா உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக திருமண வாழ்க்கையில் இருந்து விவாகரத்து வாங்க வேண்டும் என்பதை மூன்று ஆண்டுகளுக்கு முன்பே நான் முடிவு செய்து விட்டேன்.

நான் திருமணமான புதிதில் ஒரு பேட்டி ஒன்றை கொடுத்து இருந்தேன்.தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது. தன்னுடைய முன்னாள் கணவர் பிக்பாஸ்க்கு சென்று உள்ளதால் அவரை பற்றி கூகுளில் தேடும்போது இந்த வீடியோ தான் முதலில் வருகிறது. இது பற்றி பலரும் என்னிடம் கேட்கும் போது எனக்கு மிகவும் மன உளைச்சலாக இருக்கிறது. எனவே அந்த வீடியோவை நீக்கி விடுங்கள் என்று அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

Click  பட வாய்ப்புக்காக இவரும் இப்படி இறங்கிடாரே.‌.!! கிளாமரான போட்டோ ஷூட் நடத்திய நடிகை ரித்விகா!!

Leave a Reply

Your email address will not be published.