அப்பா படத்தில் நடித்த பொண்ணா இது.. ஞாபகம் இருக்கா.? இப்ப எப்படி இருக்காங்கன்னு பாருங்க!!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் நடிகையாக வலம் வருவார்கள்.அந்த வகையில் கடந்த 2016 ஆம் ஆண்டு அமலாபால் நடிப்பில் வெளியான அம்மா கணக்கு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் யுவஸ்ரீ லக்ஷ்மி.இந்த திரைப்படத்தில் அமலாபாலுக்கு மகளாக யுவஸ்ரீ நடித்திருந்தார்.இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

யுவஸ்ரீ தனது முதல் படத்திலேயே மக்கள் மத்தியில் பிரபலமானார்.இவர் 2000 ஆம் ஆண்டு காரைக்காலில் பிறந்தார். இவர் காரைக்கால் குட் ஷெப்பர்டு ஆங்கிலப் பள்ளியில் தனது பள்ளிப் படிப்பை முடித்தார்.இவர் நான்காம் வகுப்பு படிக்கும் போதே பார்வை என்ற குறும்படத்தில் பார்வையற்ற கதாபாத்திரத்தில் நடித்தார்.
இவர் 2013 ஆம் ஆண்டு பரதநாட்டியத்தில் தேசிய பாலஸ்ரீ விருதினை பெற்றார்.

இவர் நடித்த குறும்படத்தை பார்த்த சமுத்திரக்கனி அவரை அம்மா கணக்கு என்ற படத்தில் நடிக்க வைத்தார்.இதைத் தொடர்ந்து யுவஸ்ரீ அப்பா, காஞ்சனா 3 போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.
இவர் தமிழ் மட்டும் இல்லாமல் ஒரு சில மலையாள படங்களில் நடித்துள்ளார்.
தற்போது யுவஸ்ரீ லக்ஷ்மி நினைவெல்லாம் நீயடா என்ற படத்தில் நடித்து வருகிறார்.

தற்போது சமுத்திரக்கனி இயக்கத்தில் அப்பா 2,1948, மலையாளத்தில் 12 C போன்ற பல படங்களில் நடித்து வருகிறார்.
இவர் தமிழில் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.தற்போது இவர் நடித்த நினைவெல்லாம் நீயடா படத்தின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. இதை பார்த்த ரசிகர்கள் அமலாபாலுக்கு மகளாக நடித்த நடிகையா இது ..!! என்று வியப்பில் கேட்டு வருகின்றனர்.

yuvashree Lakshmi
Click  ஒரு மார்க்கமா சேலை மாராப்பை இறக்கிவிட்டு முன்னழகை காட்டிய நடிகை கஸ்தூரி.!!

Leave a Reply

Your email address will not be published.