நடிகர் விஜய் வீட்டிற்கு நள்ளிரவில் வெடிகுண்டு மிரட்டல் ! இரவில் நடந்த பரபரப்பு சோதனை…

நடிகர் விஜய் அவர்கள் சென்னை சாலிகிராமம் பகுதியில் உள்ள வீட்டில் அவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.இந்நிலையில், நேற்று இரவில் காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட மர்ம மனிதர் நடிகர் விஜய் வீட்டில் வெடிகுண்டு உள்ளதாக கூறி மிரட்டல் ஒன்றை விடுத்தார்.இந்த மிரட்டலை தொடர்ந்து வெடிகுண்டு சோதனை நிபுணர்கள் நள்ளிரவில் நடிகர் விஜய் வீட்டிற்கு சென்று சோதனை நடத்தினர்.

இதனால் நள்ளிரவில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த சோதனையின் போது வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்தது.இதனை அடுத்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் யார் என்று போலீசார் விசாரணை நடத்தினர்.இந்நிலையில் அந்த நபர் விழுப்புரத்தை சேர்ந்தவர் என்பதும் அவர் நள்ளிரவில் காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு பொய்யான வெடிகுண்டு மிரட்டல் விடுத்தார் என்பதும் தெரியவந்தது.

மிரட்டல் விடுத்த மர்ம நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.இதே போல சில நாட்களுக்கு முன்னர் நடிகர் ரஜினிகாந்த் வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக மனநலம் பாதிக்கப்பட்ட நபர் பொய் மிரட்டல் விடுத்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *