13 வயது சிறுமிக்கு இன்ஸ்டாகிராமில் காதல் வலை ! ஆ பா ச வீடியோ எடுத்து மிரட்டி 60 சவரன் நகை பறிப்பு !! முழு விவரம்
கோவையில் இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய 13 வயது சிறுமியை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி 60 பவுன் நகைகளை பறித்துக்கொண்ட ஐ.டி ஊழியர் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்தவர் ஶ்ரீநாத்(23). ஐ.டி. நிறுவன ஊழியர். இவருக்கு கோவை பீளமேடு பகுதியை சேர்ந்த 8ஆம் வகுப்பு படிக்கும் 13 வயது மாணவியுடன் இன்ஸ்டாகிராம் சமூக வலைதளம் மூலம் அறிமுகம் ஏற்பட்டு உள்ளது. சில நாட்களிலேயே இருவரும் காதலிக்க துவங்கியதாக கூறப்படுகிறது. இதனால் அடிக்கடி கோவைக்கு வந்த ஶ்ரீநாத், அந்த மாணவியை அழைத்துக்கொண்டு பல்வேறு இடங்களுக்கு சென்று வந்துள்ளார். அப்போது, மாணவியை கட்டாயப்படுத்தி அவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

மேலும், அதனை சிறுமிக்கு தெரியாமல் செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு ராஜபாளையத்தில் இருந்து மாணவியிடம் செல்போனில் பேசிய ஶ்ரீநாத், தன்னுடன் சிறுமி நெருக்கமாக இருந்த வீடியோ உள்ளதாகவும், அதனை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாகவும் மிரட்டி நகை மற்றும் பணம் கேட்டுள்ளார். இதனால் அச்சமடைந்த மாணவி, வீட்டில் இருந்த 60 பவுன் நகையை சிறிது சிறிதாக அவரிடம் கொடுத்து வந்துள்ளார்.
இதனிடையே வீட்டில் இருந்த நகைகள் மாயமானதை அறிந்த பெற்றோர், இதுகுறித்து மாணவியிடம் விசாரித்தபோது, அவர் தனக்கு நிகழ்ந்த கொடுமையை தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், கோவை கிழக்கு மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில், காவல் ஆய்வாளர் தவ்லத் நிஷா, ஐ.டி ஊழியர் ஶ்ரீநாத் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக உள்ள அவரை தேடி வருகின்றனர்.